சிவராத்திரி விரதமும் அதன் பலன்களும்
சிவராத்திரி என்றால் சிவனுக்கு மிகவும் மங்களகரமான இரவு என்று பொருள். மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். ‘ராத்திரி’ என்ற சொல்லுக்கு அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று ஈச நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. ஆகவே இந்த புண்ணிய காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விஷேசம். பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது சக்திக்கும் உரியது என்பது […]