ஆன்மிகத் தகவல்கள்
முக்கிய பதிவுகள்
பரிந்துரைக்கப்பட்டவை
ஏனைய பதிவுகள்
லட்சுமிகடாட்சம் பெருக
வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு குங்குமம் மஞ்சள் கிழங்கு மருதாணி விழுது கொடுத்து உபசரிக்க பாக்கியம், சந்தோஷம்,பொருள் வசதி பெருகும். அதிகாலை எழுந்ததும் வலது உள்ளங்கையை பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் பெருகும். வைரம் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாக்ஷம் உள்ளவருக்கே கிடைக்கும். நம் வீட்டைச் சேர்ந்த இந்த பொருட்களை விற்காமல் தவிர்ப்பது சிறந்தது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கில் தீபமேற்றி வைத்து திருமகளை வழிபட அஷ்ட ஐஸ்வரியங்களும் […]
சுக வாழ்வு தரும் சுப ஹோரைகள்
நவக்கிரகங்களில் சாயா கிரகங்களாகிய ராகு, கேது தவிர்ந்த சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களுக்கு மட்டும் ஹோரை பார்க்கப்படும். ஹோரா எனும் வடமொழி சொல்லிலிருந்து தமிழில் மருவிய வார்த்தையை ஓரை ஆகும். ஓரை எனில் ஒரு மணி நேரம் என பொருள்படும். ஆகவே ஒவ்வொரு மணி நேரமும் ஏழு கிரகங்களின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும். ஹோரைகள் சுப ஹோரை,அசுப ஹோரை என இரண்டு வகைப்படும். சுக்கிரன், புதன், குரு, சந்திரன் சுப […]
சிவராத்திரி விரதமும் அதன் பலன்களும்
சிவராத்திரி என்றால் சிவனுக்கு மிகவும் மங்களகரமான இரவு என்று பொருள். மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். ‘ராத்திரி’ என்ற சொல்லுக்கு அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று ஈச நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. ஆகவே இந்த புண்ணிய காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விஷேசம். பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது சக்திக்கும் உரியது என்பது […]
அபூர்வ யோகங்கள் அள்ளித் தரும் அபிஜித்!
ஜாதக ரீதியாக நாமறிந்த வரையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டு 1 ,2, 3, 4 என குறிக்கப்பட்டுள்ளன. 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளில் அடக்கப்பட்டு ஒருவர் பிறந்த ராசி,நட்சத்திரம் என்பன கணிக்கப்படுகிறது. இந்த 27 நட்சத்திரங்களுக்கு மேலதிகமாக 28 ஆவது நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரமானது நட்சத்திர பட்டியலில் இடம் பெறாத சக்தி வாய்ந்த நட்சத்திரமாகும். ஜித் என்றால் வெற்றி; அபிஜித் என்றால் உடனடி வெற்றியை தர கூடியது என பொருள் […]
சகல ஐஸ்வர்யங்களும் அருளும் ஸ்ரீ ராம ஜயம்
ஸ்ரீ ராம ஜயம் ஸ்ரீ ராம ஜயம் ஸ்ரீ ராம ஜயம்! இந்த ஸ்ரீ ராம ஜயம் என்ற மந்திரமானது உருவாகிய விதம் மிகவும் சிறப்பானது. போரிலே ராவணனை வென்ற ஸ்ரீ ராமர் இந்த செய்தியினை எப்படியாவது தனது பத்தினி ஜானகிடம் சேர்ப்பிக்க உவகை கொண்டார். இந்த செய்தியை சேர்ப்பிப்பதற்கு உத்தமமான ஆளாக ஆஞ்சநேயரை தேர்ந்தெடுத்தார். அந்த ராமபிரானின் ஆணையை ஏற்று சீதாப்பிராட்டி இருக்கும் இடம் வந்த ஆஞ்சநேயர் தான் சொல்ல வந்த செய்தியை, மிகுந்த சந்தோஷ மிகுதியால் சொல்ல […]
கோடீஸ்வர யோகம் தரும் குளிகன் நேரம்
நாம் எந்த ஒரு நல்ல காரியம் செய்ய முதலும் அந்த நேரத்தில் ராகு காலம், எமகண்டம் குறுக்கிடுகின்றதா என்பதை பார்ப்போம். அதேபோல சில செயல்களை செய்ய தொடங்கும் போது குளிகை நேரம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்தக் குளிகன் எனப்படுபவர் சனீஸ்வரனுக்கும் ஜேஷ்டாதேவிக்கும் பிறந்த குழந்தை. இவரது ஜனனம் மிக சிறப்பு வாய்ந்தது. ராவணனின் மனைவி மண்டோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது அசுர குருவான சுக்ராச்சாரியாரை இராவணன் சந்திக்கிறார். யாராலும் வெல்ல முடியாத, அழகும், அறிவும்கொண்ட மகனே […]
தொட்டதெல்லாம் துலங்க தினமும் பாராயணம் செய்யவேண்டிய மந்திரங்கள்
இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமானது மந்திர நாமாவளி ஆகும். ஒவ்வொரு தெய்வத்தையும் சாதாரணமாக வழிபாடு செய்வதை விட , மந்திரங்கள் அல்லது ஸ்லோகங்கள் சொல்லி வழிபாடு செய்வது மிக மேன்மையான பலனை தரவல்லது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் உரிய மந்திரத்தை சொல்லி வழிபடும் போது அதற்கான பலன் பல மடங்கு அதிகரிக்கும். மந்திரங்களுக்கு இறை சக்தியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. அதனாலேயே நாம் மந்திரங்களை சரியான முறையில் உச்சரிக்க வேண்டும் என வேதங்கள் சொல்கின்றன. மந்திரங்களை மீண்டும் […]
சிறப்பான வாழ்வு தரும் திருவோண விரதம்
திருவோண விரதம் இருப்பதன் மூலம் எந்த கடைநிலையில் எமது வாழ்க்கை இருப்பினும் வாழ்வின் உயரிய வளர்ச்சியை பெற்று நாம் உயர் பதவியை அடைய முடியும்.