சுக வாழ்வு தரும் சுப ஹோரைகள்
நவக்கிரகங்களில் சாயா கிரகங்களாகிய ராகு, கேது தவிர்ந்த சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களுக்கு மட்டும் ஹோரை பார்க்கப்படும்.
ஹோரா எனும் வடமொழி சொல்லிலிருந்து தமிழில் மருவிய வார்த்தையை ஓரை ஆகும். ஓரை எனில் ஒரு மணி நேரம் என பொருள்படும். ஆகவே ஒவ்வொரு மணி நேரமும் ஏழு கிரகங்களின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும். ஹோரைகள் சுப ஹோரை,அசுப ஹோரை என இரண்டு வகைப்படும். சுக்கிரன், புதன், குரு, சந்திரன் சுப ஹோரைகள் ஆகவும்; சூரியன், சனி, செவ்வாய், அசுப ஹோரைகள் ஆகவும் கொள்ளப்படும்.
ஒவ்வொரு நாள் உதயத்தின் போதும் அந்த ஹோரையே முதலில் காணப்படும். அதாவது திங்கட்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை சந்திர ஹோரையே காணப்படும். அதாவது அன்றைய நாளைக்கு அன்றைய ஹோரையே முதலாவதாக காணப்படும். இந்த ஹோரை முடிந்ததும் சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என ஒவ்வொரு ஹோரையும் முடிந்து மீண்டும் சந்திரனிலிருந்து ஆரம்பிக்கும். சுப ஹோரையில் எக்காரியம் செய்யலாம்; அசுப ஹோரையில் இவை விலக்கப்பட வேண்டும் என ஜோதிட சாஸ்திரங்களில் கணிக்கப்பட்டுள்ளது.

சூரியன் வேலையில் சேர்தல், பத்திரப்பதிவு, உயில் பதிவு செய்தல் ஆகியன இக்ஹோரையில் செய்யலாம். பயணங்களை தொடங்குதல், புதுமனை புகுதல் ஆகியன விலக்கப்பட வேண்டும்.
சந்திரன் வணிகம் தொடங்குதல், புனித யாத்திரை செல்லுதல், வெளிநாடு செல்லுதல் ஆகியன இந்த ஹோரைகள் செய்யலாம். தேய்பிறை சந்திர ஹோரையில் சுப காரியங்கள் விலக்கப்பட வேண்டும்.
செவ்வாய் மருத்துவ சம்பந்தமான அறுவை சிகிச்சைகள், மருந்து அருந்துதல் உகந்தது. சுப காரியம் விலக்கப்பட வேண்டும்.
புதன் வழக்குத் தொடர்பான சட்ட ஆலோசனை பெறுதல், குறிப்பு பார்த்தல், நிலபுலன்கள் வாங்குதல் சிறந்தது.
குரு இக்ஹோரையில் எடுத்த காரியம் யாவும் வெற்றி அளிக்கும். இக்ஹோரை வேளையில் முகூர்த்தம் அமைவது உத்தமம். ஆடை அணிகலன்கள் வாங்குதல், மாங்கல்ய பொன் உருக்குதல், புதிய தொழில் செய்ய உகந்த ஹோரை இதுவாகும்.
சுக்கிரன் திருமண தொடர்பான காரியங்களை செய்ய உகந்தது. சுப நிகழ்வு, விருந்து அளித்தல், புதிய வாகன கொள்வனவு ஆகியவற்றுக்கு இது உகந்தது.
சனி நிலம், வீடு, மனை வாங்குதல், விற்றல் இக்கோரையில் முயற்சிக்கலாம். ஆனால் பிரயாணம் செய்தல், வைத்தியசாலை செல்லல் தவிர்க்கப்பட வேண்டும்.
சுப ஹோரையில் அஷ்டமி, நவமி, மரண யோகம் பார்க்க தேவையன்று.