தொட்டதெல்லாம் துலங்க தினமும் பாராயணம் செய்யவேண்டிய மந்திரங்கள்
1 min read

தொட்டதெல்லாம் துலங்க தினமும் பாராயணம் செய்யவேண்டிய மந்திரங்கள்

இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமானது மந்திர நாமாவளி ஆகும். ஒவ்வொரு தெய்வத்தையும்  சாதாரணமாக வழிபாடு செய்வதை விட , மந்திரங்கள் அல்லது ஸ்லோகங்கள் சொல்லி வழிபாடு செய்வது மிக மேன்மையான  பலனை தரவல்லது. 

ஓம் மந்திரம்
தொட்டதெல்லாம் துலங்க தினமும் பாராயணம் செய்யவேண்டிய மந்திரங்கள்

 ஒவ்வொரு  தெய்வத்திற்கும்  உரிய மந்திரத்தை சொல்லி வழிபடும் போது அதற்கான பலன் பல மடங்கு அதிகரிக்கும். மந்திரங்களுக்கு இறை சக்தியை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. அதனாலேயே நாம் மந்திரங்களை சரியான முறையில் உச்சரிக்க வேண்டும் என வேதங்கள் சொல்கின்றன.  மந்திரங்களை மீண்டும் மீண்டும் சொல்லுவதால் அவைகள் உயிர் பெற்று, கவசம் போல் இருந்து அந்த மந்திரத்தை சொல்லுபவரை காக்கும் என்பது நம்பிக்கை. இந்த மந்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தரக் கூடியதாகும்.ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு மந்திரங்கள்  உள்ளன. தெய்வங்களின் அருளை பெறுவதற்கு மந்திரங்களை  உச்சரிப்பது மிக முக்கியமானதாகும். எத்தனையோ விதமான மந்திரங்கள் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மந்திரங்கள் சில மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும். இந்த மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடர்ந்து சொல்லி வந்தால் அவற்றின் பலன் எளிதில், முழுமையாக கிடைத்து விடும்.

இந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை , எந்த முறையில் தொடர்ந்து சொல்லுவதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்த கொள்ளலாம். இவற்றில் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப மந்திரங்களை தொடர்ந்து சொல்லுவதால் அதற்கான முழு பலனையும் பெற முடியும்.

  1. ஓம் ஏகாதந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி பிரசோதயாத் – விநாயகருக்கான சக்தி வாய்ந்த மந்திரமான இதை தினமும் பாராயணம் செய்வதால்  மன திறன்கள், ஞானம் மற்றும் அறிவொளியை மேம்படுத்த வல்ல சக்தியை கொடுக்கும். இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான தடைகளும் விலகும்.
  2. ஓம் நமஷிவாய – நமக்குள் இருக்கும் ஆணவம், பகை போன்ற கேட்ட எண்ணங்கள்  நீங்கி மன அமைதியும், தெளிவும் பெறலாம்.  பிரச்சனைகள், கவலைகளில் இருந்து வெளிவரும் வழியை மனம் தானே உணரும். பய உணர்வு, நவகிரகங்களால் ஏற்படும் கெடு பலன்களை நீக்கும்.இந்த மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் மனம் ஒரு நிலைப்படும், உங்களுக்கு உள்ளும், புறமும்  நேர்மறை  ஆற்றல் பரவும்.
  3. ஓம் – இந்த பிரணவ மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது. எண்ண ஓட்டங்களையும், கவனச் சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகபடுத்துகிறது. ஓம் என்னும் மந்திரத்தை, 11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும்.பிரணவ மந்திரமான ஓம் மந்திரத்தை 3 முறை சொன்னால் கூட மன அமைதியை தரக் கூடியதாகும். மன அழுத்தம் குறையும்.
  4. ஓம் பூர் புவ ஸூவஹ தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோநக ப்ரசோதயாத் – இதை தினசரி பாராயணம் செய்து  வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும்.  மனவலிமை  பெருகும். மன உறுதி  உண்டாகும். இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களிலிருந்து விமோசனம் பெற உதவும். இந்த காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் ஆன்மா, உடல், மனம் ஆகியவை தூய்மை ஆகும்.
  5. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் லட்சுமிபியோ நமஹ – இந்த மந்திரத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொல்லி வார  நிறைந்த செல்வசெழிப்புடன், அதிஷ்டத்தை தரவல்லது. 
  6. ஓம் ஐம் ஹ்ரீம் ஹனுமதே ஸ்ரீ ராம தூதாய நமஹ – இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்தி பூஜை அறையில் விளக்கு ஏற்றி 108 தடவைகள் சொல்லி வந்தால் அனைத்து விதமான பிரச்சனைகள், மனக்கலக்கம், பயம், ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும். தடைகளை நீக்கி தைரியத்தை வளர்த்து கொள்ள மிகவும் உதவும்.
  7. ஓம் க்லீம் விஷ்ணுவே நமஹ – இந்த மந்திரத்தை வியாழக்கிழமை தோறும் 108 முறை சொல்லி வந்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
  8. ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்உர்வாருகமிவ பந்தனான்ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் – அற்புதமான மஹாமிருத்யுஞ்சயா மந்திரத்தை உச்சரிப்பதால் அகால மரணம் ஏற்படாது, மரண பயம் நீங்கும் என்று சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பதால் அவரின் ஆயுளை அதிகரிக்கும்.
  9. லலிதா சகஸ்ரநாமம் – பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள லலிதா சகஸ்ரநாமத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் மன பக்குவம் ஏற்படும். அதாவது இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் சகல யோகங்களுடன் சௌபாக்கியத்தையும் அளிக்க வல்லது.நம்பிக்கையுடன் பாராயணம் செய்வதன் மூலம் மாங்கல்ய யோகம், சற்புத்ர பாக்கியம் நன்முறையில் அமையும். எப்படிப்பட்ட துன்பங்களில் இருந்தும் எளிதில் வெளி வரும் ஆற்றல் பிறக்கும் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
  10. ஓம் விஷ்வாய நாம கந்தர்வலோசினி நாமி லவுசதிகர்னை தாஸ்மை விஷ்வாயா ஸ்வாஹா – எதிரிகளை வெல்லக் கூடிய ஆற்றலை தரக் கூடிய மிகவும் சக்தி வாய்ந்த அற்புத மந்திரமாகும். ஆயிரம் ஆண்டுகள் எதிரிகள், பகையை அழிக்கக் கூடிய ஆற்றலை தரக் கூடிய மந்திரமாகும்.