லட்சுமிகடாட்சம் பெருக
வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு குங்குமம் மஞ்சள் கிழங்கு மருதாணி விழுது கொடுத்து உபசரிக்க பாக்கியம், சந்தோஷம்,பொருள் வசதி பெருகும்.
அதிகாலை எழுந்ததும் வலது உள்ளங்கையை பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
வைரம் மற்றும் வெள்ளி பாத்திரங்கள் லட்சுமி கடாக்ஷம் உள்ளவருக்கே கிடைக்கும். நம் வீட்டைச் சேர்ந்த இந்த பொருட்களை விற்காமல் தவிர்ப்பது சிறந்தது.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கில் தீபமேற்றி வைத்து திருமகளை வழிபட அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.
கல் உப்பு மஞ்சள் என்றும் வீட்டில் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும். கல் உப்பு வாங்குவதாயின் வெள்ளி கிழமைகளில் வாங்குவது சிறப்பு.
திருமாலுக்கும் குபேரருக்கும் உகந்த நெல்லி மரம் செல்வம் பெருக வழிவகுக்கும். ஆகவே நெல்லி மரத்தை வீட்டில் வளர்ப்பது லக்ஷ்மி அருள் பெருக்கும்.
வெள்ளி கிழமைகளில் மருதாணி பூ மற்றும் விதைகளை சேர்த்து கொத்தாக வாசலில் கட்டி தொங்க விட வேண்டும்.அவை காய்ந்ததும் அவற்றை சாம்பிராணி தூபத்துடன் சேர்த்து சாம்பிராணி போட வேண்டும். இவ்வாறு செய்யினும் மஹாலக்ஷ்மி அருள் கிடைப்பதுடன் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
